மிகவும் வித்தியாசமான வண்ணத்தில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பஜாஜ் V15

எய்மர் கஸ்டம்ஸ் நிறுவனம் பஜாஜ் V15 மாடலை மிகவும் வித்தியாசமான வண்ணத்தில் கஸ்டமைஸ் செய்துள்ளது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

பஜாஜ் நிறுவனம் V15 எனும் மோட்டார் பைக் மாடலை இந்தியாவின் விமானம் தாங்கி போர் கப்பலின் இரும்பில் இருந்து செய்துள்ளது. இந்த INS விக்ராந்த் எனும் போர் கப்பல் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு வரை இந்த கப்பல் இந்திய கப்பல் படையில் மிகப்பெரிய பங்காற்றியது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கப்பல் உடைத்து தனித்தனியாக பிரிக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பஜாஜ் நிறுவனம் இந்த கப்பல வாங்கியதிலிருந்து ஒரு புத்தம் புதிய பைக் தயாரிக்கப்படும் என அறிவித்தது.

INS விக்ராந்த் கப்பலை நிறுவுறுத்தும் விதமாக இவ்வாறு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.