EICMA 2015: டுகாடி X டியாவெல் மாடலை வெளிப்படுத்தப்பட்டது

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்து வரும் EICMA எனும் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் டியாவெல் மாடலில் இருந்து மேம்படுத்தப்பட்ட X டியாவெல் மாடலை வெளிப்படுத்தியது டுகாடி நிறுவனம்.  டியாவெல் மாடல் தான் டுகாடி நிறுவனத்தின் முதல் குரூசர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 1626 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 156 bhp திறனையும் 128.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. 

இந்த மாடலில் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட், ஆண்டி லாக் ப்ரேக் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியாவை கிடைக்கும்.  இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.