மீண்டும் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CBR 250R

ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட  2018 ஆம் ஆண்டு CBR 250R மாடலை மீண்டும் இந்தியாவில் ரூ 1.66 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் கடந்த வருடம் BS-IV மாசுக்கட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் ABS இல்லாத மாடல் ரூ 1.66 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும், ABS கொண்ட மாடல் ரூ 1.96 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டு ஹோண்டா CBR 250R மாடலின் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. எனினும் புதிய LED முகப்பு விளக்குகள், புதிய கிராபிக்ஸ் மற்றும் புதிய வண்ணங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் தற்போது மஞ்சள், சிவப்பு, க்ரே & பச்சை கலந்த கலவை மற்றும் க்ரே & ஆரஞ்சு கலந்த கலவை என நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் 249cc கொள்ளளவு கொண்ட BS-IV எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.5 bhp (8500 rpm) திறனும் 22.9 Nm (7000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் TVS  அப்பாச்சி RR 310மற்றும் KTM RC200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.