இந்தோனேசியாவில் வெளிப்படுத்தப்பட்டது ஹோண்டா CBR250RR

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட CBR250RR பைக் மாடலை இந்தோனேசியாவில் வெளிப்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம். இது தற்போது விற்பனையில் இருக்கும் CBR250R மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சூப்பர் பைக் ஆகும். இந்த மாடல் முதலில் 2015 ஆம் ஆண்டு டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாடலில் 249.7 cc கொள்ளளவு கொண்ட இரண்டு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் திறன் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இதன் இரண்டு வெயிலிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 2060 மிமீ நீளமும்,  724 மிமீ அகலமும், 1060 மிமீ உயரமும், 1398 மிமீ வீல் பேசும் மற்றும் 790 மிமீ இருக்கை உயரமும்  கொண்டது. மேலும்  145 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இந்த மாடல் சிவப்பு, கருப்பு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

டிராக்கில் பைக் ஓட்டுபவர்களுக்கு இந்த மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பிரீமியம் செக்மென்டை சேர்ந்ததால் சற்று விலை அதிகமாக இருக்கும். இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டால் கவஸாகி நிஞ்ஜா 300, யமஹா YZF-R3 மற்றும் கட்டம் RC390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.