இந்தியன் மோட்டார் சைக்கிள் FTR 1200 மாடல்களின் படங்கள்

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் FTR 1200 S மாடல்களின் முன்பதிவை சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த மாடல்கள் FTR 1200 S மற்றும் FTR 1200 S ரெஸ் ரெப்ளிகா என இரண்டு வேரியன்ட்டுகளில் முறையே ரூ 14.99 லட்சம் மற்றும் ரூ 15.49 லட்சம் ஷோரூம் விலையில் கிடைக்கும். மேலும் FTR 1200 எனும் வேரியன்டிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் முதல் பிளாட் ட்ராக் ரேஸ் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடல்களின் படங்கள் மற்றும் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இந்த மாடல்களில் 1203cc கொள்ளளவு கொண்ட லிக்யூட் கூல்டு V-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 120PS திறனையும், 115Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 320mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 260mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கார்னரிங் ABS சிஸ்டம் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் Sport, Standard and Rain என மூன்று டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 4.3-இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே, டிராக்சன் கன்ட்ரோல், வீல் கன்ட்ரோல் மற்றும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.