இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் பைக் வோல்டா ஜேப்

வாகனங்களினால் காற்று மாசுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவில் இது மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்திய அரசும் காற்று மாசுபடுவதை தடுக்க சில கடுமையான விதிகளை விதித்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு சுற்றுசூழலுக்கு உகந்த இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் பைக் மாடலை சென்னையை சேர்ந்த வோல்ட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மாடல் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு முழுமையான சார்ஜுக்கு 60 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வெறும் 7 பைசா மட்டுமே ஆகும் என வோல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடலில் மூன்று கிலோ எடை உள்ள லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை மிகவும் எளிதாக பைக்கிலிருந்து பிரித்து பொறுத்த முடியும்.  

இந்த மாடல் முழுவதும் பாக்ஸ் பிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பார்ப்பதற்கு சிறப்பான தோற்றத்தை தருகிறது. இதன் முன்பதிவுகள் இப்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மாடல் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.