இந்தியாவில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு கவாஸாகி Z1000, Z1000 R மற்றும் Z250

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் புதிய 2017 ஆம் ஆண்டு  Z1000, Z1000 R மற்றும் Z250 மாடல்களை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் கவாஸாகி நிறுவனம் Z650, நிஞ்ஜா 650, Z900 மற்றும் மேம்படுத்தப்பட்ட நிஞ்ஜா 300 மற்றும் வெர்ஸிஸ் 650 என ஐந்து மாடல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி Z1000

புதிய கவாஸாகி Z1000 மாடல் ரூ. 14.49 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1043 cc இன் லைன் நன்கு சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 142PS @ 11000rpm  திறனையும் 111Nm @ 7300rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் கடந்து விடும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 258 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.  இந்த மாடல் கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் கிடைக்கும்.

கவாஸாகி Z1000R 

புதிய கவாஸாகி Z1000R மாடல் ரூ. 15.49 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் Z1000 மாடலின் ஸ்போர்ட்டியர் வெர்சன் ஆகும் மற்றபடி எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1043 cc இன் லைன் நன்கு சிலிண்டர் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலுமே ABS வசதி கிடைக்கும். மேலும் இந்த மாடல் தான் Z சீரீஸில் அதிக திறன் கொண்ட மாடல் ஆகும்.

கவாஸாகி Z250

புதிய கவாஸாகி Z250 மாடல் ரூ. 3.09 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 249 cc கொள்ளளவு கொண்ட பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 32PS @ 11000rpm  திறனையும் 21Nm @ 10000rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் தான் Z சீரீஸில் குறைந்த திறன் கொண்ட மாடல் ஆகும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.