சுசுகி ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP சிறப்பு பாதிப்பு மாடல்கள் வெளியிடப்பட்டது

சுசூகி நிறுவனம் ஜிக்சர் SP  மற்றும் ஜிக்சர் SF SP எனும் சிறப்பு பாதிப்பு மாடல்களை வெளியிட்டுள்ளது. ஜிக்சர் SP மாடல் ரூ.92,376 சென்னை ஆன் ரோடு விலையிலும் ஜிக்சர் SF SP மாடல்  ரூ.1,01,499 சென்னை ஆன் ரோடு விலையிலும் வெளியிடப்பட்டுள்ள்ளது.

இந்த சிறப்பு பாதிப்பு மாடல்களில் புதிய ரேஸ் பைக் போன்ற கிராபிக்ஸ், சிறப்பு பாதிப்பு எம்பலம், புதிய பின்புற டிஸ்க் பிரேக், மெரூன் வண்ண இருக்கை மற்றும் புதிய பின்புற லெட் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் கிரே மற்றும் கருப்பு வண்ண கலவையில் மட்டுமே கிடைக்கும்.   இத்துடன் பியூவல் இன்ஜெக்சன் கொண்ட ஜிக்சர் SF-FI மாடலும் வெளியிடப்பட்டது. இது ஜிக்சர் SF  மாடலின் மோட்டோ GP  வேரியண்டில் மட்டும் கிடைக்கும். 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 154.9 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான்  பொருத்தப்பட்டுள்ளது.   இந்த என்ஜின்  14.8 bhp (8000rpm)   திறனும் 14 NM (6000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 63 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.