வெளியிடப்பட்டது புதிய TVS அபாச்சி RTR 200 4V ரேஸ் எடிசன் 2.0

TVS நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய அபாச்சி RTR 200 4V ரேஸ் எடிசன் 2.0 மாடலை ரூ 97,320 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் புதிய கிராஃபிக்ஸ், புதிய தூம் மற்றும் புதிய A-RT ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தய மாடலை விட ரூ 1,500. அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • APACHE RTR 200 4V R 2.0 - ரூ 97320
  • APACHE RTR 200 4V PIRELLI R 2.0 - ரூ 102320
  • APACHE RTR 200 FI 4V R 2.0 - ரூ 110020
  • APACHE RTR 200 4V ABS R 2.0 - ரூ 111120

அபாச்சி RTR 200 4V மாடலின் FI மற்றும் ABS மாடல்கள் ஒரு சில டீலர்ஷிப்புகளில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எஞ்சினின் எந்த மாற்றமும் இல்லை, அதே 197.75cc என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20.23 Bhp திறனையும் 18.1 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் 60 கிலோ மீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் சிவப்பு, கிரே, கருப்பு, மேட் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் முன்புறத்தில் 270 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட பெட்டல் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் முதல் முறையாக TVS அபாச்சி RTR 200 4V ரேஸ் எடிசன் 2.0 மாடலில் தான் ஸ்லிப்பர் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.