க்ரக்ஸ் மாடலின் விற்பனையை நிறுத்தியது யமஹா

யமஹா நிறுவனம் தனது இணையத்திலிருந்து க்ரக்ஸ் மாடலை நீக்கியுள்ளது. மிகக்குறைந்த விற்பனையை பதிவு செய்து வந்ததால் யமஹா நிறுவனம் இந்த மாடலின் விற்பனையை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதே போல் ரே ஸ்கூட்டர் மாடலின் விற்பனையையும் சில நாட்களுக்கு முன்பு தான் நிறுத்தியது யமஹா நிறுவனம். 

க்ரக்ஸ் மாடல் யமஹா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வந்த பழைய மாடல் இது  2004 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது யமஹா நிறுவனத்திடம் 100 cc பைக் மாடலே இல்லை ஸ்கூட்டர் மாடல் மட்டும் தான் உள்ளது. இந்தியாவில் 100 cc  பைக்குகளுக்கு தான் மவுசு அதிகம் எனவே ஒரு புதிய மாடலை யமஹா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சல்யூடோ மாடல் தான் தற்போது யமாஹ் நிறுவனத்தால விற்கப்படும் குறைந்த கொள்ளளவு எஞ்சின் கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 125 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.