ரூ 10.69 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு கவாஸாகி வெர்ஸிஸ் 1000

கவாஸாகி நிறுவனம் புதிய 2019 ஆம் ஆண்டு வெர்ஸிஸ் 1000 மாடலை ரூ 10.69 லட்சம் ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் CKD ரூட் மூலம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் தான் கவாஸாகி நிறுவனத்தின் விலை அதிகமான டூரர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் 1,043 cc கொள்ளளவு கொண்ட இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 bhp (9,000 rpm) திறனும் 102Nm (7,500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 310 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 250 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆப்ரோடு மாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.