ரூ 2.41 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஹோண்டா CB300R

ஹோண்டா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட CB300R மாடலை இறுதியாக இந்தியாவில் ரூ 2.41 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலின் விநியோகம் மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் க்ரே மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாடல் நியோ ஸ்போர்ட் கேப் எனும் டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஹண்டா நிறுவனத்தின் CB1000R மாடலின் வடிவமைப்புகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 286cc கொள்ளளவு கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 30.45PS திறனையும் 27.5Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் முன்புறத்தில் 296mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டியூவல் சேனல் ABS சிஸ்டம் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் என ஏராளமான ப்ரீமியம் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.