இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய கவாஸாகி Z650, நிஞ்ஜா 650, Z900 மற்றும் மேம்படுத்தப்பட்ட நிஞ்ஜா 300 மற்றும் வெர்ஸிஸ் 650

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் புதிய Z650, நிஞ்ஜா 650, Z900 மற்றும் மேம்படுத்தப்பட்ட நிஞ்ஜா 300 மற்றும் வெர்ஸிஸ் 650   ஐந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கவாஸாகி Z650
புதிய கவாஸாகி Z650 மாடல் ரூ. 5.19 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்போட்ர்ஸ்  வடிவமைப்பில் மிகவும் நேர்த்தியாக வடிவமைப்பட்டுள்ளது. இந்த மாடலில் 648 cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 68 Bhp திறனை வழங்கும். இது முந்தய மாடலுடன் ஒப்பிடும் பொது 4 Bhp குறைவானது. மேலும் இந்த மாடலில் ABS  மற்றும் புதிய ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

கவாஸாகி நிஞ்ஜா 650
புதிய கவாஸாகி நிஞ்ஜா 650 மாடல் ரூ. 5.69 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ZX-10R மாடலின் வடிவமைப்பு அதிகமாக இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  Z650  மாடலில் உள்ள அதே  648 cc பேரலல் ட்வின் எஞ்சின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்பார்க் கருப்பு, பேர்ல் வெள்ளை மற்றும் கேண்டி ஆரஞ்சு என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். 

கவாஸாகி Z900
புதிய கவாஸாகி Z900 மாடல் ரூ. 9 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் நேக்ட் ஸ்ட்ரீட் வடிவமைப்பில் மிகவும் நேர்த்தியாக Z1000 மாடலின் வடிவங்களை பயன்படுத்தி வடிவமைப்பட்டுள்ளது. இந்த மாடலில் 948 cc கொள்ளளவு கொண்ட இன்-லைன் நான்கு சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 125 Bhp திறனையும் 98.9 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் ABS நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

கவாஸாகி நிஞ்ஜா 300
மேம்படுத்தப்பட்ட கவாஸாகி நிஞ்ஜா 300 மாடல் ரூ. 3.64 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கிராபிக்ஸ் மட்டும் மாற்றப்பட்டுள்ளது மற்றபடி பெரிய மாற்றங்கள் இல்லை. இந்த இந்த மாடலில் 296 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 38.9 Bhp திறனையும் 27 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகி வெர்ஸிஸ் 650
இத்துடன் மேம்படுத்தப்பட்ட வெர்ஸிஸ் 650 மாடலும்  ரூ. 6.6 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய வண்ணம் மற்றும் புதிய கியர் இண்டிகேட்டர் உடன் கிடைக்கிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.