ரூ 54,790 விலையில் வெளியிடப்பட்டது TVS ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிசன்

TVS நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலின் கார்கில் எடிசன் சிறப்பு பதிப்பு மாடலை ரூ 54,790 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் இந்திய ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக TVS நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 109.7 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 8.4 bhp (7000 rpm) திறனும் 8.7 Nm (5000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 86 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.