ரூ 9.46 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ட்ரியம்ப் ஸ்பீட் ட்வின்

ட்ரியம்ப் நிறுவனம் ஸ்பீட் ட்வின் மோட்டார் பைக் மாடலை ரூ 9.46 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மாடர்ன் கிளாசிக் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாடர்ன் கிளாசிக் என்பது பழமையான வடிவத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வடிவமைப்பது. ட்ரியம்ப் நிறுவனம் போன்விள்ளே T120, போன்விள்ளே T100, த்ரக்ஷ்டன் R மற்றும் த்ரக்ஷ்டன் ஆகிய மாடல்களை மாடர்ன் கிளாசிக் தத்பரியத்தில் தான் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பழமையான வடிவமைப்பை விரும்புவோருக்கு இந்த மாடல்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

ட்ரியம்ப் த்ரக்ஷ்டன் R மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே சேசிஸ் மற்றும் எஞ்சின் தான் இந்த மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1200cc கொள்ளளவு கொண்ட பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 97 Bhp  திறனையும் 112 Nm  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இத முன்புறத்தில் 305mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் மற்றும் பின்புறத்தில் 220mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ABS, டிராக்சன் கன்ட்ரோல், USB  சாக்கெட், ரைடு பை வைர் மற்றும் ட்ரிவிங் மோட் - ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின்  என ஏராளமான தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.