2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் யமஹா MWT - 9 மூன்று சக்கர பைக்

யமஹா நிறுவனம்  MWT - 9 எனும் மூன்று சக்கர பைக் மாடலை 2016  டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 2017 ஆண்டில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் ஒரு புதிய கான்செப்டில் உருவாக்கப்பட்ட மூன்று சக்கரங்களை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல். இந்த மாடலை யமஹா நிறுவனம் சில ஆண்டுகளாகவே சோதனை செய்து வருகிறது. மேலும் இந்த மாடல் சிறந்த கையாளுமையையும் சொகுசு அனுபவத்தையும் வழங்கும் என யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடலில் 847 cc கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சம்மாக 115 Bhp  திறனை வழங்கும். இந்த கான்செப்டிற்காக  நிறைய பேடண்ட்களை வைத்துள்ளது யமஹா நிறுவனம். இந்த மாடல் வெளியிடப்பட்டால் ஒரு புதிய செக்மெண்டாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.