36.5 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மினி கன்ட்ரிமென்

2014 ஆம் ஆண்டு நியூ யார்க் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட மினி கன்ட்ரிமென் 36.5 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிட்டது BMW இந்தியா நிறுவனம். வெளிப்புறத்தில் பதிய முகப்பு கிரில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

உட்புறத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 112 Bhp திறனையும் 270 Nm இழுவை திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 11.3 வினாடிகளிலும் அதிகபட்சமாக 185 கிலோ மீட்டர் வேகம் வரையும் செல்லும். 

BMW இந்தியா நிறுவனம் இந்தியாவில் மினி கூப்பர் D 5 டோர், மினி கூப்பர் D 3 டோர், மினி கூப்பர் S 5 டோர், மினி கூப்பர் கன்வெர்டிபில் மற்றும் மினி கூப்பர் கன்ட்ரிமென் ஆகிய ஐந்து மாடல்களை விற்பனை செய்கிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.