எடியோஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் (Toyota Xclusive Edition) மாடல் வெளியிடப்பட்டது

டொயோடா நிறுவனம் எடியோஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலை வெளியிட்டது. எக்ஸ்க்ளூசிவ் எடிசனின் பெட்ரோல் மாடல் 7.8 லட்சம் ஷோரூம் விலையிலும் டீசல் மாடல் 8.9 லட்சம் ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டது. வெளிப்புறத்தில் முன்புற கிரில், முகப்பு விளக்கு, பின்புற விளக்கு மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் அகியாவற்றில் குரோம் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

உட்புறத்தில் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்டர் கன்சோல் மற்றும் கதவுகளில் மர வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல்   மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 90 bhp (5600 rpm) திறனும் 132Nm (3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 16.78 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டீசல் என்ஜினில் மாடல் 68 bhp (3800 rpm) திறனும் 170Nm (1800-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  23.59 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.