டட்சன் கோ NXT லிமிடெட் எடிசன் மாடல் வெளியிடப்பட்டது (Datsun GO NXT)

சில உபகரணங்களை சேர்த்து டட்சன் கோ NXT லிமிடெட் எடிசன் மாடல் 4.09 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டட்சன் கோ NXT லிமிடெட் எடிசன் மாடல் 1000 எண்ணிக்கையில் மட்டும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இந்த உபகரணங்கள் வெறும் 5 ஆயிரம் விலையில் கிடைக்கும். 

பின்புற பார்கிங் சென்சார், ரிமோட் கீ லாக், பிபுற பார்சல் செல்ப், புதிய பியானோ கருப்பு வண்ணத்திலான டேஸ் போர்டு மற்றும் பின்புற புகை போக்கி குரோம் பினிஷ் ஆகியவை இந்த சிறப்பு பதிப்பில் கிடைக்கும் உபகரணங்கள். 

மேலும் டட்சன் நிறுவனம் தென் இந்தியாவில் 3 நாட்கள் சிறப்பு விழாவை நடத்த இருக்கிறது. அப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் மற்றும் தங்கமும் பரிசாக பெற முடியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.