2016 டெல்லி வாகன கண்காட்சி: HND-14 எனும் காம்பேக்ட் SUV கான்செப்டை அறிமுகப்படுத்தியது ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் 4 மீட்டருக்கும் நீளம் குறைவான HND-14 எனும் காம்பேக்ட் SUV கான்செப்டை 2016டெல்லி வாகன கண்காட்சியில்  அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும்காம்பேக்ட் SUV செக்மண்டில் தற்போது ஹுண்டாய்  நிறுவனமும் ஒரு கான்செப்டை தயார் செய்துள்ளது.

விளக்குகள், பிளாஸ்டிக் பிளேட்டுகள், பெரிய வில் ஆர்ச் என கம்பீரமான தோற்றத்தை தருகிறது. ஆனால் இது கான்செப்ட் மாடல் தான் எனவே தயாரிப்பு நிலை மாடளுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். என்ஜின் மற்றும் மற்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.விரைவில் இந்த மாடல் தொடர்பான மேலும் சில தகவல்களை ஹுண்டாய் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் வெளியிடப்பட்டால் மகிந்திரா TUV 300, போர்ட் போர்ட் ஈகோ ஸ்போர்ட் மற்றும் வரவிருக்கும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரீசா போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.