2017 ஆம் ஆண்டு சிட்டி மாடலின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஹோண்டா
ஹோண்டா நிறுவனம் பிப்ரவரி 14 ஆம் தேதி மேம்படுத்தப்பட்ட 2017 சிட்டி மாடலை வெளியிட உள்ளது அது தொடர்பாக புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
முன்புறத்தில் கிரில், முகப்பு விளக்குகள் மற்றும் முன்புற வடிவம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. பின்புறத்தில் விளக்குகள் மற்றும் பம்பர் சிறிது மாற்றப்பட்டுள்ளது. உட்புற வடிவமைப்பிலும் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும்1.5 லிட்டர் டீசல் என்ஜினிலேயே தான் கிடைக்கும்.
தற்போது விற்பனையில் உள்ள மாடலின் பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 17.8 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 18 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
அதே போல் டீசல் என்ஜின் மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 25.1 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
டீசர் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.