அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது 2017 நிசான் GT-R நிஸ்மோ

நிசான் நிறுவனம் 2017 GT-R நிஸ்மோ சூப்பர் காரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது. சிறந்த ஏரோ டைனமிக் தன்மைக்காக முன்புற பம்பர் மற்றும் சில வெளிப்புற வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது. அதிக வேகம் செல்லும் போது சிறந்த நிலைதன்மையுடன் இருக்க முந்தய மாடலை விட சிறந்த ஏரோ டைனமிக் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தய GT-R மாடலில் உள்ள அணைத்து வசதிகளும் இதிலும் உள்ளது. குறிப்பாக அதிக வேகத்தில் சிறந்த நிலைப்புத்தன்மை மற்றும் சிறந்த கையாளுமையையும் தருவதற்காக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 3.8 லிட்டர் ட்வின் டர்போ V6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 592 Bhp  திறனையும் 650 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட டியூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்து வித வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் இந்த வருட இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.