2018 டெல்லி வாகன கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது மாருதி சுசூகி பியூச்சர் S மினி SUV கான்செப்ட்

மாருதி சுசூகி நிறுவனம் புத்தம் புதிய ஃபியூச்சர் S காம்பேக்ட் SUV கான்செப்ட் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் இக்னிஸ்  மாடலின் அளவில் தான் இருக்கும். எனினும் இந்த மாடல் இக்னிஸ் மாடல் போல் அல்லாமல் ஒரு SUV  மாடல் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ௨௦௨௦ ஆம் ஆண்டு வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

லேனோ, புதிய ஸ்விப்ட், இக்னிஸ் மற்றும் டிசைர் மாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ள ஹார்ட்டெக் எனும் அதே பிளாட்பார்மில் தான் இந்த புதிய மாடலும் தயாரிக்கப்பட உள்ளது. இது ஒரு கான்செப்ட் மாடல் என்பதால் தயாரிப்பு நிலை மாடலுக்கு இதற்கும் சில வேறுபாடுகள் இருக்கும்.

எஞ்சின் தொடர்பாகவும் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சினிலும் வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா மற்றும் இக்னிஸ் மாடல்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.