2018 ஜெனிவா மோட்டார் கண்காட்சி: Eவிஷன் செடான் கான்செப்டை அறிமுகப்படுத்தியது டாடா

டாடா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் புத்தம் புதிய Eவிஷன் செடான் கான்செப்ட்டை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனம் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் தொடர்ந்து இருபதாவது வருடமாக பங்குபெறுவதை கொண்டாடும் விதமாக Eவிஷன் செடான் கான்செப்டை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனம் இந்தவருடம் வெளியிடும் மூன்றாவது கான்செப்ட் இது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் H5X மற்றும் 45X மாடல்களை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Eவிஷன் செடான் மாடல் H5X கான்செப்ட் மாடல் தயாரிக்கப்பட்ட OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. பெயரிலிருந்தே இந்த மாடல் ஒரு எலெக்ட்ரிக் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் திடீரென பார்ப்பதற்கு ஜாகுவார்  மாடல் போல தோற்றத்தை தருகிறது. உட்புறம் மிகவும் புதுமையாக பீஜ் மற்றும் க்ரே வண்ண கலவையில் மர வேலைப்பாடுகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் தொடர்பான விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. மேலும் இதன் தயாரிப்பு நிலை மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது போன்ற விவரங்கள் ஏதும் வெளியிடவில்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.