2018 ரெனோ க்விட் லிவ் பார் மோர் ரீலோடேட் சிறப்பு பதிப்பு மாடல் வெளியிடப்பட்டது

ரெனோ நிறுவனம் க்விட் மாடலின் 2018 ஆம் ஆண்டு லிவ் பார் மோர் ரீலோடேட் எனும் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ரெனோ நிறுவனம் ஏற்கனவே லிவ் பார் மோர் எனும் சிறப்பு பதிப்பு மாடல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்: 
க்விட் 0.8L SCe - ரூ 2,66,700
க்விட் 1.0L SCe MT - ரூ 3,57,900
க்விட் 1.0L SCe AMT  - ரூ 3,87,900

இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள்:

  • ஸ்டீல் சில்வர் கிரில் இன்ஸெர்ட்ஸ் 
  • இரட்டை வண்ண ரூப் பார்ஸ்
  • பக்கவாட்டு கண்ணாடியில் கொடுக்கப்பட்டுள்ள எலுமிச்சை வண்ண இன்ஸெர்ட்ஸ் 
  • அலாய் வீலில் கொடுக்கப்பட்டுள்ள எலுமிச்சை வண்ண இன்ஸெர்ட்ஸ்  
  • புதிய பாடி கிராபிக்ஸ் 
  • ரெவெர்ஸ் பார்க்கிங் சென்சார் 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 0.8 மற்றும் 1.0 லிட்டர் என்ஜினில் தான் கிடைக்கிறது. 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். 
 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.