ரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி

டொயோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய எட்டாம் தலைமுறை கேம்ரி மாடலை ரூ 36.95 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஒரு வருடத்திற்கு முன்பே உலகளவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் டொயோடா நிறுவனத்தின் புதிய குளோபல் ஆர்கிடெக்ச்சர் TNGA எனும் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இந்த மாடலும் முழுவதும் மறுவடிவம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் சஸ்பென்ஷன் கட்டமைப்பு என தொழில்நுட்பத்திலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் உயரம் குறைக்கப்பட்டுள்ளது அதே சமயம் இதன் வீல் பேசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4885 மிமீ நீளமும் 1840 மிமீ அகலமும் 1455 மிமீ உயரமும் மற்றும் 2825 மிமீ வீல் பேசும் கொண்டது. உட்புறம் முழுவதும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும் மென்மையான தொடுதல் உணர்வை தரும் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மற்றும் டொயோடாவின் புதிய ஹியூமன் இன்டெர்பேஸ் சிஸ்டம் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 PS @ 5,700 rpm திறனையும் 221 Nm @ 3,600-5,200 rpm இழுவைத்திறனையும் வழங்கும் மற்றும் இத்துடன் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 120 PS திறனையும் மற்றும் 202 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 218 PS திறனை வழங்கும். இந்த மாடலில் CVT டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஹோண்டா அக்கார்டு, வோல்க்ஸ் வேகன் பேஸட் மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் ஆகிய மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.