ரூ 5.89 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2020 மாருதி சுசூகி டிசைர்

மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2020 ஆம் ஆண்டு டிசைர் மாடலை ரூ 5.89 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும், புதிய பெட்ரோல் எஞ்சினும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இந்த மாடல் தற்போது பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • LXI - Rs 5.89 lakhs
  • VXI - Rs 6.79 lakhs
  • VXI AGS - Rs 7.31 lakhs
  • ZXI - Rs 7.48 lakhs
  • ZXI AGS - Rs 8.0 lakhs
  • ZXI + - Rs 8.28 lakhs
  • ZXI + AGS - Rs 8.8 lakhs

இந்த மாடலின் ஒப்பனையில் புதிய மற்றும் பெரிய முகப்பு கிரில், புதிய இரட்டை வண்ண அலாய் மற்றும் புதிய பனி விளக்கு ஹௌசிங் ஆகியவை மட்டுமே புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. மேலும் இந்த மாடலில் அதிக வசதிகள் கொண்ட இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

2020 மாருதி சுசூகி டிசைர் மாடலில் பலேனோ உள்ள அதே 1.2-லிட்டர்  டூயல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 89bhp (6000 rpm) திறனும் 113Nm (4400rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ஐந்துஸ்பீடு மேனுவல் மற்றும் ஐந்து ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இதன் மேனுவல் மாடல் 23.26kmpl மைலேஜும் ஆட்டோமேடிக் மாடல் 24.12kmpl மைலேஜும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.