2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்படும் BMW X2

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான BMW  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் ஒன்றான X2 மாடலை 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்த உள்ளது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் ஒரு கூப் SUV  வகையை சேர்ந்தது. என்ஜின் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடலில்  எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்  மற்றும் BMW  நிறுவனத்தின் xDrive  ஆல் வீல் ட்ரைவ்  சிஸ்டம் ஆகியவை கிடைக்கும். 

இந்த மாடல் X1 மற்றும் X3 மாடல்களுக்கு இடையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் தொடர்பான விவரங்கள் 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் விரிவாக வெளியிடப்படும். தொடர்ந்து விவரங்களை தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.