வெளியிடப்பட்டது டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் ஆனிவெர்சரி எடிசன் மாடல்கள்

மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுதம் விதமாக டட்சன் நிறுவனம் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் ஆனிவெர்சரி எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. டட்சன் கோ ஹேட்ச் மாடல் ரூ. 4.19 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் கோ பிளஸ் MPV மாடல் ரூ. 4.90 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் டாப் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நிசான் நிறுவனம் தான் குறைந்த விலை கொண்ட கார்களை  டட்சன் பிராண்டில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல்களில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏராளமான ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் புதிய கிராபிக்ஸ், ஆனிவெர்சரி எடிசன் பேட்ச் ஆகியவையும் உட்புறத்தில் புதிய ப்ளூ வண்ண அலங்கார அலங்காரங்கள், புதிய மேட்ஸ், இருக்கை கவர், பின்புற சென்சார், ப்ளூடூத், ஆம்பியண்ட் லைட், மொபைல் ஆப்  மற்றும் புதிய கீலெஸ் என்ட்ரி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர்  பெட்ரோல்  என்ஜினில்  தான் கிடைக்கிறது. இந்த எஞ்சின்  68bhp (6000 rpm) திறனும்104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.