1.0 லிட்டர் என்ஜின் கொண்ட டட்சன் ரெடி கோ மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

டட்சன் நிறுவனம் விரைவில் வெளியிடப்பட உள்ள 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட ரெடி கோ மாடலின் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த மாடலை ரூ 10,000  முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மாடல் ஜூலை 26 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை புதிய என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் க்விட் மாடலில் உள்ள அதே 999cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். ஏற்கனவே இந்த மாடல்  0.8 லிட்டர் எஞ்சினுடன் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது 53 Bhp  திறனையும் 72 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 25.17 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ARAI சன்றளிதுள்ளது. இந்த மாடல் ஹூண்டாய் இயான், மாருதி சுசூகி ஆல்டோ K10 மற்றும் ரெனோ க்விட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.