ரூ. 2.39 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டட்சன் ரெடி கோ

டட்சன் நிறுவனம்  ரூ. 2.39 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப  விலையில் ரெடி கோ மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் ஐந்து வேரியண்டுகளில் கிடைக்கிறது. இந்த மாடல் மாருதி சுசுகி ஆல்டோ, ஹுண்டாய் இயான் மற்றும் ரெனால்ட் க்விட் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.  இந்த மாடல் பச்சை, சிவப்பு, சில்வர், கிரே மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடலும் ரெனால்ட் க்விட் மாடலின் பிளாட்பாமில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த மாடல் வித்தியாசமான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. LED  விளக்குகள், பனி விளக்குகள், பின்புற ஸ்பாய்லர், அறுங்கோண முன்புற கிரில், பூமராங் வடிவிலான பின்புற விளக்குகள் ஆகியவை  இந்த மாடலில்  கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்ற டட்சன் மாடல்களை போலவே தான் உள்ளது. இந்த மாடல் 185 மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. இந்த செக்மேண்டிலேயே இது தான் அதிக தரை இடைவெளி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் ரெனால்ட் க்விட் மாடலில் உள்ள 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 53 Bhp  திறனையும் 72 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 25.17 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ARAI சன்றளிதுள்ளது. 

வேரியன்ட் வாரியாக இதன் டெல்லி ஷோ ரூம் விலை விவரம்:

Datsun Redigo D- ரூ. 2.39 லட்சம்
Datsun Redigo A- ரூ. 2.82 லட்சம்
Datsun Redigo T- ரூ 3.09 லட்சம்
Datsun Redigo T (O)- ரூ 3.19 லட்சம்
Datsun Redigo S- ரூ 3.34 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.