வெளியிடப்பட்டது டட்சன் ரெடி கோ கோல்ட் 1.0L சிறப்பு பதிப்பு மாடல்

பண்டிகை காலத்தை முன்னிட்டு டட்சன் நிறுவனமும்  ரெடி கோ கோல்ட் 1.0L சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது.  இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் கூடுதலாக சில உபகரணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு பதிப்பு மாடல் 1.0L எஞ்சினில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த மாடல் வெள்ளை, சில்வர் மற்றும் க்ரே என மூன்று வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடலில் கோல்ட் வண்ண புதிய பாடி கிராபிக்ஸ், கோல்ட் வண்ண க்ரில் இன்ஸெர்ட், புதிய ஸ்பாய்லர் மற்றும் வீல் கவர், கோல்ட் வண்ணத்தில் அலங்காரம் செய்யப்பட்ட உட்புறம், புதிய மியூசிக் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் மொபைல் ஆப் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய புதிய ஆம்பியண்ட் விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே அதே 999cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 Bhp திறனையும் 91 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.