வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட போர்டு ஈக்கோஸ்போர்ட்

போர்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட  ஈக்கோஸ்போர்ட் மாடலை வெளிப்படுத்தியது. இந்த மாடல் விரைவில் அமெரிக்காவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனால் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும் இந்த மாடல் சென்னை ஆலையில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தியாவிலும் விரைவில் வெளியிடப்படலாம்.

முன்புறத்தில் போர்டு நிறுவனத்தின் புதிய மற்றும் பெரிய க்ரில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. குறிப்பாக பின்புறத்தில் உள்ள ஸ்பேர் வீலை நீக்கியுள்ளது போர்டு நிறுவனம். உட்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம், புதிய சென்டர் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் என முழுவதுமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் மாற்றம் இருக்காது அதே  1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின்,  1 லிட்டர்  ஈகோபூஸ்ட்  பெட்ரோல்  என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல்  என்ஜின் என மூன்று என்ஜினில் தான் கிடைக்கும்.  இந்த மாடல் அமெரிக்காவில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.