அடுத்த ஆண்டு வெளியிடப்படும் ஹோண்டா BR - V

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேல் வெளியிடப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக BR - V யின்  மாதிரி மாடலை இந்தோனேசியா வாகன கண்காட்சியில் வெளியிட்டது.  மேலும் இந்தோனேசியாவில் முன்பதிவு செய்யடும் எனவும் 2016 ஆம் ஆண்டு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேல் வெளியிடப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மாடல் ப்ரியோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் பெரிய குரோம் கிரில், பனி விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் பார்பதற்கு சர்-வ போல் தோற்றமளிக்கிறது. பக்கவாட்டில் ப்ரியோ, அமேஸ் மற்றும் மொபிலியோ போன்ற மாடலில் உள்ள அதே வடிவமைப்பு இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும். இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன்  பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும், டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

இந்த மாடல் 230 முதல் 265 மில்லியன் இந்தோனேசியன் ரூபாயில் கிடைக்கும். இந்திய மதிப்பில் 10.8 முதல் 12.4 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.