சீனாவில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் க்ரெடா

ஹூண்டாய் நிறுவனம் சீனாவில் நடைபெற்ற செங்டு வாகன கண்காட்சியில் மேம்படுத்தப்பட்ட க்ரெடா மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே பிரேசிலில் வெளியிடப்பட்டுள்ளது மேலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படலாம்.

இந்த மாடலில் முன்புறத்தில் புதிய மற்றும் பெரிய க்ரில் மற்றும் பின்புறத்தில் புதிய விளக்குகள், வடிவமைப்பு ஆகியாவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. உட்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. சீனாவில் இந்த மாடல் புதிய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 7 ஸ்பீட் கொண்ட டியூவல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனுடனும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 140 Bhp திறனையும் 242 Nm இழுவைத்திறனையும் வழங்கும்.

இந்தியாவில் இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மற்றும் 1.4 & 1.6 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது. மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன்  உடனும் கிடைக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இந்த மாடல் பெரும் எண்ணிக்கையை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் மேலும் இதன் விற்பனையை அதிகரிக்க உதவும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.