ரூ 3.90 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன்

ஹூண்டாய் நிறுவனம் இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலை ரூ 3.90 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் 0.8 லிட்டர் எஞ்சின் கொண்ட   ERA+ மற்றும் Magna+ SE எனும் இரண்டு வேரியன்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.  ERA+ வேரியன்ட்  ரூ 3.90 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் Magna+ SE வேரியன்ட்  ரூ 4.17 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாடலில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. புதிய ரூப் ரயில், புதிய மோல்டிங் கிராபிக்ஸ் மற்றும் 6.2 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவை மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்ல அதே 0.8 லிட்டர் என்ஜினில் தான் கிடைக்கிறது. இது 56 bhp (5500 rpm) திறனும் 76Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின்   மாடல் 21.1 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.