தீபாவளி காலத்தில் வெளியிடப்படும் இக்னிஸ் & 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் என்ஜின் கொண்ட விட்டாரா ப்ரீஸா

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தீபாவளி பண்டிகை காலத்தில் இக்னிஸ் மினி SUV  மற்றும் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் எஞ்சின் கொண்ட விட்டாரா ப்ரீஸா ஆகிய மாடல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகி நிறுவனம் பெட்ரோல் என்ஜின் கொண்ட விட்டாரா ப்ரீஸா  மாடல் விரைவில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 1.2 லிட்டர் அல்லது 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் தற்போது இந்த மாடல்  1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் என்ஜினுடன் தீபாவளி காலத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் இந்த என்ஜின் பலேனோ மாடலிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விட்டாரா ப்ரீஸா மாடல் 1.2 லிட்டர் அல்லது 1.4 லிட்டர் இவற்றில் ஏதேனும் ஒரு எஞ்சினிலும் வெளியிடப்படும்.

மாருதி சுசுகி நிறுவனம் இக்னிஸ் மாடலையும்  தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 டீசல் என்ஜின்களில் கிடைக்கும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 115 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல்  5 முதல் 9 லட்சம் விலை கொண்டதாகவும் மகிந்திரா KUV 100 மாடலுக்கு போட்டியாகவும்  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.