2017 ஆடி A5 மற்றும் S5 மாடல்களின் படங்கள்

ஆடி A5 மற்றும் S5 மாடல்கள் சில நாட்களுக்கு முன்பு தான் வெளிப்படுத்தப்பட்டது. 9 வருடங்களுக்குப் பிறகு ஆடி நிறுவனம் இரண்டாம் தலைமுறை A5 மற்றும் S5 மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் டிசைன் மற்றும் என்ஜின் என அனைத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் 60 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டுள்ளது.

A5 மற்றும் S5 மாடளுக்கும் வடிவத்தில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். உலகளவில் ஆடி A5 மாடல் இரண்டு விதமான டீசல் எஞ்சின்களிலும் மூன்று விதமான பெட்ரோல் எஞ்சின்களிலும் கிடைக்கும். S5 மாடல் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.