2019 ஜனவரி 1 முதல் கார்களின் விலையை அதிகரிக்கும் கார் நிறுவனங்கள்

உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி விகித அதிகரிப்பு என ஏராளமான காரணங்களால் கார் நிறுவனங்கள் வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கார்களின் விலையை அதிகரிக்க உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது, மேலும் சில நிறுவனங்கள் விலை ஏற்றத்தை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டாடா நிறுவனம் அதிகபட்சம் ரூ 40,000 வரை விலை அதிகரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிசான் நிறுவனம் 4 சதவீதமும் ரெனோ நிறுவனம் 1.5 சதவீதமும் விலை அதிகரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதே போல் மாருதி நிறுவனம் விலை அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளது, அனால் எவ்வளவு என்ற விவரம் ஏதும் வெளியிடவில்லை. 

டொயோடா மற்றும் இசுசூ நிறுவனங்களும் விலை ஏற்றத்தை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.