ரூ.38.25 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டீசல் என்ஜின் கொண்ட ஜாகுவார் XE

ஜாகுவார் நிறுவனம் ரூ.38.25 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் டீசல் என்ஜின் கொண்ட XE மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் மட்டுமே விற்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் பியூர், ப்ரெஸ்டீஜ் மற்றும் போர்ட்போலியோ என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

இந்த மாடலில்  ஜாகுவார் நிறுவனத்தின் புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம்  டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  மாடல் 180 bhp திறனும் 430Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூப் மற்றும் ௮ இன்ச் டச் சுகிறீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என அனைத்து வசதிகளும் கிடைக்கும். இந்த மாடலை ரூ 2 லட்சம் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ், BMW  3 சீரீஸ், வோல்வோ S60 மற்றும் ஆடி A4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.