ரூ 17.53 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஜீப் காம்பஸ் பெட்ராக் எடிசன்

ஜீப் நிறுவனம் இந்தியாவில் 25,000 மாடல்களை விற்பனை செய்ததை கொண்டானும் விதமாக காம்பஸ் பெட்ராக் எடிசன் மாடலை ரூ 17.53 லட்சம்  டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. பெட்ராக் எடிசன் மாடல் ஸ்போர்ட் 4x2 வேரியன்ட்டில் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜீப் காம்பஸ் பெட்ராக் எடிசன் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்:

  • பின்புற பார்க்கிங் கேமரா 
  • கரனுப்பு நிற அலாய் வீல்
  • சைடு ஸ்டெப்
  • பெட்ராக் எம்பலம் பொறிக்கப்பட்ட இருக்கை கவர் 
  • கருப்பு நிற ரூப் ரயில் 
  • புதிய தரை விரிப்பு 
  • புதிய கிராபிக்ஸ்

ஜீப் காம்பஸ் பெட்ராக் எடிசன் மாடல் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கும். இந்த என்ஜின் 173Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைக்கும். ஜீப் காம்பஸ் மாடலை வெளியிட்ட பிறகு தான் பியட் நிறுவனத்தின் விற்பனை மிக அதிகமாக வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.