ஸ்டானிக் காம்பேக்ட் SUV மாடலை வெளிப்படுத்தியது கியா

தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் ஸ்டானிக் காம்பேக்ட் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது.  இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு பிராங்க்ப்பூர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் இந்த வருட இறுதிக்குள் ஐரோப்பிய சந்தையில் வெளியிடப்படும். ஆனால் மற்ற நாடுகளில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த மாடல் ரியோ ஹேட்ச் மாடலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறம் ரியோ மாடலின் வடிவம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ரியோ மாடலில் உள்ள அதே எஞ்சினில் தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சில நாட்களுக்கு முன்பு தான் கியா நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்போதே முதல்கட்டமாக ஒரு ஹேட்ச், செடான் மற்றும் ஒரு காம்பேக்ட் SUB ஆகியவை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் என திடமாக எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.