வெளிப்படுத்தப்பட்டது திறந்த கூரை கொண்ட லம்போர்ஃஹினி சென்டெனாரியோ

லம்போர்ஃஹினி நிறுவனம் திறந்த கூரை கொண்ட சென்டெனாரியோ சூப்பர் கார்  மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் வெறும் 20 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் மேலும் இதன் அனைத்து முன்பதிவுகளுமே முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்திய மதிப்பில் ரூ.15.4 கோடி விலை கொண்டது.

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை சென்டெனாரியோ கூப் மாடலின் வடிவம் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் மட்டும் கூடுதலாக சில ஸ்பாய்லர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 6.5 லிட்டர் V12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 759 Bhp  திறனையும் 1000 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 2.9 வினாடிகளில் கடந்து விடும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 350 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.