பெட்ரோல் என்ஜினுடன் ரூ. 56.5 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

லேண்ட் ரோவர்  நிறுவனம் பெட்ரோல் என்ஜினுடன் கூடிய  டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை ரூ.56.5 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் HSE வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். என்ஜின் தவிர வேறு எந்த மாற்றமும் இந்த மாடலில் செய்யப்படவில்லை.

இதுவரை இந்த மாடல் 2.2 லிட்டர் என்ஜினில் TD4 மற்றும் SD4 என இரண்டு வித திறனில் வெளியிடப்பட்டு வந்தது. 2.2 லிட்டர் TD 4 எஞ்சின் 150 bhp திறனையும் 400 Nm இழுவைதிரனையும் 2.2 லிட்டர் SD 4 190 bhp திறனையும் 400 Nm இழுவைதிரனையும் வழகும். தற்போது இந்த மாடல் கூடுதலாக 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடனும் கிடைக்கும். 

இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 237 bhp திறனையும் 340 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் அனைத்து மாடலிலும் 9 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கிடைக்கும். மேலும் 5 மற்றும் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாகவும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.