இந்தியாவில் வெளியிடப்பட்டது ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில்

லேன்ட் ரோவர் நிறுவனம் மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடலை ரூ 69.53 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த கன்வெர்டிபில் மாடல் HSE Dynamic எனும் டாப் வேரியண்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூடிய மேற்கூரை கொண்ட மாடல் ரூ 59.99 லட்சம் வெளியியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடலின் கான்செப்ட் முதலில் 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் தான் முதல் கன்வெர்டிபில் சொகுசு SUV என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் தான் மிக நீளமான மேற்கூரை கொண்ட கன்வெர்டிபில் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரேஞ் ரோவர் எவோக் கன்வெர்டிபில் மாடல் இரண்டு காதவுகள் மட்டுமே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முழுவதுமாக தானியங்கி தன்மை கொண்ட கன்வெர்டிபில் மேற்கூரையை 20 வினாடிகளுக்குள் 48 Kmph வேகத்தில் செல்லும் போதும் திறந்து மூட முடியும். மேலும் இந்த மாடலில் 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், 16 ஸ்பீக்கர் கொண்ட மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார், ABS, EBD மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 237 bhp திறனையும் 340 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 9 வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 217 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.1 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.