விரைவில் வெளிப்படுத்தப்படும் ஐந்தாம் தலைமுறை லேன்ட் ரோவர் டிஸ்கவரி

லேன்ட் ரோவர் நிறுவனம் உலகின் சிறந்த ஆப் ரோடு மாடல்களில் ஒன்றான டிஸ்கவரியின் ஐந்தாம் தலைமுறை மாடலை விரைவில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. 

ஏற்கனவே இருக்கும் டிஸ்கவரி மாடலின் அடிப்படையில் தான் இந்த மாடலும் உருவாக்கப்படுகிறது அனால் அதை விட குறித்த எடையும் அதிக செயல்திறனும் கொண்டதாக இருக்கும். மேலும் வடிவத்திலும் புதிய அம்சங்கள் அதிகமாக இருக்கும்.  லேன்ட் ரோவர் மாடல்களின் சொகுசு வசதிகள் பற்றி கூற தேவையில்லை இருப்பினும் பழைய மாடலை விட அதிக சொகுசு வசதிகல்கொண்ட மாடலாக இது இருக்குமாம்.

என்ஜினில் அந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கபடுகிறது. அதே 3.0 லிடேறேஞ்சினில் தான் கிடைக்கும். அதே போல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை வசதி கொண்டதாகவும் இருக்கும்.  ஆப் ரோடு அம்சங்களிலும் எந்த குறையும் இருக்காது. இந்த மாடல் அடுத்த ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.