டாடா மோட்டார்ஸின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி  விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது. இந்தியாவி சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு விளம்பர தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். மெஸ்ஸி தற்போது அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் நிறுவனத்தை விளம்பரப்படுத்த உலகம் முழுவதும் தெரிந்த ஒரு நபரை விளம்பர தூதராக நியமித்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். மேலும் டாடா நிறுவனம் புதிய ஹேட்ச் பேக் மாடலான கைட் மற்றும் MPV மாடலான ஹெக்சா ஆகிய மாடல்களை வெளியிட மும்மரமாக வேலை செய்து வருகிறது. இந்த இரண்டு மாடலும் 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.