வெளியிடப்பட்டது மஹிந்திரா பொலேரோ BS6 மாடலின் விலை விவரங்கள்

மஹிந்திரா நிறுவனம் புதிய BS6 மாசுக்கட்டுப்பாடு கொண்ட பொலேரோ மாடலின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் B4, B6 மற்றும் B6(O) என மூன்று வித வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
B4 - Rs 8,06,714
B6 - Rs 8,72,898
B6 OPT - Rs 9,08,282
 

இந்த மாடலில் புதிய BS6 மாசுக்கட்டுப்பாடு கொண்ட 1.5 லிட்டர் mHawkD75 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 76 Bhp திறனையும் 210 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் அதே ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

புதிய BS6 மாசுக்கட்டுப்பாடு கொண்ட மஹிந்திரா பொலேரோ மாடலின் வெளிப்பறத்தில் புதிய பம்பர், புதிய கிரில், புதிய பனி விளக்குகள், புதிய முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. மேலும் இந்த மாடலில் இரண்டு காற்றுப்பை, ABS, பின்புற பார்கிங் சென்சார் மற்றும் ஸ்பீட் அலெர்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.