சாங் யாங் டிவோலி மாடலை டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்கிறது மகிந்திரா

மகிந்திரா நிறுவனம் சாங் யாங் டிவோலி மாடலை 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மகிந்திரா நிறுவனம் ஹுண்டாய் க்ரெடா மாடலுக்கு போட்டியாக இந்த மாடலை களமிறக்குகிறது. ஏற்கனவே சாங் யாங் பிராண்டில் ரெக்ஸ்டன் மாடலை மகிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட மாடல். மகிந்திரா நிறுவனம் ஏற்கனவே 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட TUV 300 எனும் SUV மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கும். ஆனால் முதலில் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் மட்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 128 Bhp திறனையும் 160 Nm இழுவைதிறனையும் வழங்கும். அதேபோல் இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 116 Bhp திறனையும் 300 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த  மாடலில்  ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மாடல் முன்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் கிடைக்கும். 

இந்த மாடல் 11 முதல் 14 லட்சம்  விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.