மகிந்திரா KUV 100 மாடலின் வேரியன்ட் மற்றும் வண்ண விவரங்கள்

மகிந்திரா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான்  புத்தம் புதிய KUV 100 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் மினி SUV எனும் புதிய செக்மென்டையே உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. KUV என்ற பெயருக்கு கூல் யுடிலிட்டி வெஹிகிள் என்று அர்த்தமாம். மேலும் இந்த மாடலை கே யு வி 1 ஒ ஒ என்று உச்சரிக்க வேண்டும். 

இந்த மாடல் K2, K2+, K4, K4+, K6, K6+ மற்றும் K8 என பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் மொத்தம் 14 வேரியண்டுகளில் கிடைக்கும். ABS மற்றும் காற்றுப்பை அனைத்து  வேரியண்டுகளிலும் கிடைக்கும். ஆரம்ப நிலையில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் வெளியிடப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஆரஞ்சு,சில்வர், வெள்ளை, கருப்பு, சிவப்பு, ஆக்வா மரைன் மற்றும் கிரே என மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கும்.

இது மிகவும் அழகான மற்றும் கம்பீரமான் வெளிப்புற தோற்றம் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சிறிய குரோம் கிரில் என அருமையான தோற்றத்தை தருகிறது. இரண்டாம் வரிசை  கதவுக்கான கைப்பிடி விண்ட் சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் ஒரு சிறிய  XUV 500 மாடலை போல் தோற்றமளிப்பதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் இந்த மாடலில் 1.2 லிட்டர் mFALCON எனும் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. mFALCON  1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 Bhp திறனையும் 114 Nm இழுவைதிறனையும் வழங்கும். mFALCON  1.2 லிட்டர் டீசல் எஞ்சின் 77 Bhp திறனையும் 109 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினுமே 1198 cc கொள்ளளவு கொண்டது.

மேலும் இந்த மாடல் அடுத்த (2016) ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.